அறிஞர் அண்ணா உயிரோடு இருந்திருந்தால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார் - திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

அறிஞர் அண்ணா உயிரோடு இருந்திருந்தால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார் - திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அமமுக செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டர். 

முன்னதாக, டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,மதுபான விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது உண்மை அதில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. டாஸ்மாக்கில் எவ்வளவு ஊழல் நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். திமுக ஆட்சியில் கழிவறையில் கூட ஊழல் நடந்திருக்கிறது. டெல்லியில் ஊழலுக்கு எதிராக அரவிந்த் கெஜர்வால் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தவர். இன்று அவரே ஊழலில் சிக்கி உள்ளார். இன்று டெல்லி மக்கள் அவரை தோற்கடித்துள்ளார்.

இதுபோல திமுக ஊழல்களும், வருகின்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். திமுக திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்குவார்கள் ஆனால் அந்த நிதி மக்களிடம் சென்று சேருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். அப்போது தமிழகத்தினுடைய கடன்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக அடைத்துவிட்டு, ஊழலற்ற ஆட்சி வழங்கப்படும்.திமுக என்ற தீய சக்தி ஆட்சி பொறுப்பிற்கு வரக்கூடாது என்ற மனப்பாண்மையுடன், கூட்டணிக்கு வரக்கூடியவர்களோடு தேர்தலில் கைகோர்ப்போம்.

அதிமுக வும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் அது with பழனிச்சாமியா , without பழனிச்சாமியா என்பது தெரியாது. அதிமுகவில் 90 சதவீத தொண்டர்களின் எதிர்ப்பார்பு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது தான். அதிமுக தொண்டர்களின் நிலைப்பாட்டை தான் செங்கோட்டையன் வெளிப்படுத்தி வருகிறார்.எங்களைப் பொறுத்தவரை அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதுதான்.

அரசியலில் எல்லாவற்றுக்கும் வாய்ப்புகள் உண்டு.அதிமுக வில் பிரிந்தவர்கள் ஓரணியில் திரண்டால் அதிமுகவில் ஓபிஎஸ் சசிகலா இணையலாம் ஆனால் நாங்கள் தனி கட்சி தொடங்கி விட்டோம் மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து தொண்டர்களின் கருத்து கேட்டு தான் முடிவு எடுக்கப்படும்.ஜெயலலிதா இருந்த போது தேர்தல் பிரச்சாரத்தில் 'மோடியா, லேடியா' என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார். இது தேர்தல் அரசியலுக்காக மட்டுமே பேசியது. முதலமைச்சராக இந்த லேடி வேண்டுமா பிரதமராக அந்த மோடி வேண்டுமா என்கிற அடிப்படையில் அவர் பேசினார். எதிர்நோக்கத்துடன் பேசியது கிடையாது. ஜெயலலிதாவும், மோடியும் சிறந்த நல்ல நண்பர்கள்.தமிழ்நாட்டில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் தர முடியும்.

அறிஞர் அண்ணா முதல்வரான பின் கொடுத்த பேட்டியில், 'இந்தியாவிற்கு மூன்றாவது மொழி எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அது வரும். அந்த மூன்றாவது மொழியாக ஹிந்தி தான் இருக்கும்' என்பதை அண்ணா மறைமுகமாக கூறியுள்ளார்.மற்ற மாநிலங்களோடு இணைக்க கூடிய அந்த மூன்றாவது இணைப்பு மொழி ஹிந்தி மட்டும் தான். அண்ணா குறிப்பிட்டு கூறுகையில் மும்மொழி கொள்கையை ஏற்பதற்கு நாங்கள் தயார் தான், சென்னையில் குஜராத்தி, மராத்தி போன்ற மொழிகள் போதிக்கப்பட்டது. அதேபோல் ஹிந்தியையும் பள்ளிகளில் கற்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார். 

ஒருவேளை அண்ணா தற்போது உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் மும்மொழி கொள்கையையும் ஹிந்தி மொழியையும் ஏற்றுக் கொண்டிருப்பார்.ரூபாய் என்ற எழுத்து மாற்றப்பட்டதற்கு பல்வேறு கண்டனங்கள் முன் வைக்கப்படுகிறது. திமுகவின் செயல்பாடுகள் சிறுபிள்ளைகள் விளையாட்டாக உள்ளது. சிறுபிள்ளைகள் கையில் விளையாடக்கூடிய விளையாட்டுப் பொருளை உடைப்பது போன்று திமுக அரசு செயல்படுகிறது.ஒன்றிய அரசு தமிழகத்திற்கு அனைத்து அங்கீகாரங்களையும் வழங்குகிறது. ஆனால் ஒன்றிய அரசு நிதி கொடுப்பதில்லை என திமுக பொய் பிரச்சாரம் செய்துவருகிறது.

பெரியார் தாய் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று கூறியிருக்கிறார் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார் பெரியார் கூறியது தான் அவர் பேசினார் அதில் தவறு இல்லை. இரு மொழி கொள்கையை மாற்ற வேண்டும் என நினைத்தால் அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு அச்சம் வரும் அது வரை அண்ணாதுரை தான் ஆட்சி செய்வார் என அண்ணா கூறியுள்ளார் என்கிற கேள்விக்கு அதை சிலர் தங்கள் வசதிக்காக கூறுகிறார்கள் என தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் அ ம மு க திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட கட்சியின் திருச்சி கிழக்கு தொகுதி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision