அரசு மாதிரி பள்ளியை தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு ஐ ஜி, எஸ்பி நேரில் ஆய்வு

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் ரூ 56.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுஉள்ள அரசு மாதிரி பள்ளியை தமிழக முதல்வர் 8ம் தேதி திறந்து வைக்க இருப்பதை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐ ஜி ஜோசி நிர்மல் குமார், எஸ்பி. செல்வநாகரத்தினம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில்தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ 56.47 கோடி மதிப்பிட்டில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டும் பணிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ல் அடிக்கல் நாட்டினார்.
அந்த மாதிரி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி கட்டிட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதோடு பணி நிறைவடைய உள்ளது.இந்த நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு வரும் 8ம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருவதுடன் 8 மற்றும் ப தேதி முடிவடைந்த பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
மேலும் 50,000 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும் வழங்குகிறார்.இந்த நிலையில் 8ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானத்தில் வரும் மு க ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்திலிருந்து துவாக்குடி அண்ணாவளைவு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவியர் விடுதியை திறந்து வைக்கிறார்.
இதனை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோசி நிர்மல் குமார், எஸ்பி செல்வ நாகரெத்தினம், திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனவாத் ஆகியோர் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும்
https://www.threads.net/@trichy_vision