பக்தர்களுக்கு முக்கிய செய்தி - சமயபுரத்தில் தொடங்குகிறது நவராத்திரி திருவிழா

samayapuram maariamman temple navarathri

பக்தர்களுக்கு முக்கிய செய்தி - சமயபுரத்தில் தொடங்குகிறது நவராத்திரி திருவிழா

சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு, புராணங்களில் கூறியுள்ளபடி, அசுரரான மகிஷாசுரனை அழிப்பதற்காக

முதல் மூன்று நாட்களுக்கு துர்க்கை, நடு மூன்று நாட்களுக்கு மகாலட்சுமி, கடைசி மூன்று  சரஸ்வதி என ஊசிமுனையில் நின்று கடுமையான தவம் மேற்கொண்டனர், தொடர்ந்து பத்தாவது நாளில் வெற்றியும் பெற்று விட, இந்த பத்து நாட்களையும் நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த வருடம் நவராத்திரி திருவிழா 3-10-2024 வியாழக்கிலமை அன்று துவங்கி 11-10-2024 வெள்ளிக்கிழமை வரை நவராத்திரி உற்சவமாகவும், 12-10-2024 விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை நாளன்று இரவு 7.30 மணிக்கு அம்பாள் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்து அம்பு போடும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

 நவராத்திரி உற்சவத்தின் போது தினமும் மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும், மாலை 6 மணியளவில் மேற்கு பிரகாரத்தில் அம்பாள் அருள்பலிப்பார், தொடர்ந்து மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை கலை நிகழ்ச்சிகளும் நடைபெறஉள்ளது.

தினம் இரவு 8 மணியளவில் சிறப்பு தீபாராதனையும் நடைபெறும் கோவில் நிர்வாகத்தின் நவராத்திரி திருவிழா அழைப்பிதழில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய...

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision