உணவு பாதுகாப்பு துறையின் உலக சாதனை நிகழ்வு துவக்கம்

உணவு பாதுகாப்பு துறையின் உலக சாதனை நிகழ்வு துவக்கம்

 திருச்சிராப்பள்ளி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் உணவு பாதுகாப்பு துறையின் சட்டமன்ற அறிவிப்பினை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் TRIUMPH உலக சாதனை நிகழ்வாக சுமார் ஒரு இலட்சம் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடம் மற்றும் பொதுமக்களிடம் உறுதிமொழி கையொப்பம் பெறும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.பிரதீப்குமார்,  முதல் கையொப்பமிட்டு  இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரா.ரமேஷ்பாபு  முன்னிலை வகித்தார்.

மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் கூறுகையில், மேலே கூறப்பட்ட நிகழ்வில் தாங்கள் அனைவரும் பங்கு பெற்று உலக சாதனை நிகழ்வினை வெற்றி பெற்று சாதனை நிகழ்த்த ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட உணவு பாதுகாப்பு தறை சார்பாக இந்திய உணவு பாதகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையரகத்தின் அறிவுறுத்தலின் படி வருகின்ற 06.08.2022 மற்றும் 07.08.2022 அன்று நடைபெற இருக்கும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (EAT RIGHT WALKATHON) மற்றும் உணவு திருவிழா (EAT RIGHT MELA ) நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்திலுள்ள 18 அரசு துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியானது 06.08.2022 சனிக்கிழமையன்று காலை 8.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆரம்பித்து பிஷப் ஹீபர் கல்லுாரி மைதானத்தில் நிறைவு பெறும் என்றும், 07.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கும் உணவு திருவிழாவில் அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலர்களும் மற்றும் பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதமக்களும் கலந்து கொண்டு பயன்பெறஅறிவுறுத்தப்பட்டது.

மேலும், உணவு திருவிழா நடைபெறும் திடலில் தமிழகத்தின் மாவட்ட வாரியான பிரபலமான உணவுகளுக்கான அரங்குகள் அமைப்பது என்றும் மற்றும் நேரடி சமையல் அரங்குகள் அமைத்து பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறையினர் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், உணவுகள் சார்ந்த அரசு துறையினர் அரங்குகள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO