100 சதவீத கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட திருச்சி மத்திய சிறை திகழ்கிறது

100 சதவீத கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட திருச்சி மத்திய சிறை திகழ்கிறது

கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக நிறைவேற்றும் விதமாக திருச்சி மத்திய சிறையில் இன்று 19.06.2021 சிறைவாசிகள் மற்றும் சிறை களப்பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இதில் 468 சிறைவாசிகளுக்கு சிறையின் உள்ளே சிறை மருத்துவமனையிலும் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்களது குடும்ப உறுப்பினர்கள் 110 பேர் நபர்களுக்கு சிறை வளாக குடியிருப்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிலும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

இதுவரை திருச்சி மத்திய சிறையில் 1290 சிறைவாசிகளுக்கும், 365 சிறை களப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு தமிழக சிறைகளில் அனைத்து சிறைப் பணியாளர்கள் மற்றும் சிறையில் உள்ள சிறைவாசிகள் வாசிகளுக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு 100% இலக்கை எட்டிய முதல் மத்திய சிறையாக திருச்சி மத்திய சிறை திகழ்கிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF