ரோலர் ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி முதல் முதலாக தங்கப்பதக்கம்

ரோலர் ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி முதல் முதலாக தங்கப்பதக்கம்

சைனா நாட்டில் மக்காவு வில் நடைபெற்ற ரோலர் ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு அணிக்கு (திருச்சி மட்டும்) இருந்து 17 வயதுக்குட்பட்டோர் 19 வயதுக்குட்பட்டோ மேலும் சீனியர் பெண்கள் அணியை சேர்ந்த திருச்சியை சேர்ந்த எட்டு பேர் நாற்பதாவது ஆண்டாக சர்வேதச அளவில் நடைபெறும் ரோலர் ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்று விளையாடினர்.

முதல் முறையாக (தமிழ்நாடு) இந்தியா அணி தங்கப் பதக்கத்தை சீனியர் பெண்கள் அணி 7-1 என்ற கோல் கணக்கில் மக்காவு அணியை இந்தியா வென்று பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. பதக்கம் வென்ற சீனியர் பெண்கள் அணியில் தமிழ்நாடு, ஹரியானா, சண்டிகர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சேர்ந்தவர்கள் இந்திய அணி சார்பாக விளையாடினர்.

அதில் நான்கு பெண்கள் திருச்சி ஹாக்கர்ஸ் கிளப் மூலம் பயிற்சி பெற்று விளையாடி திருச்சியில் இருந்து தேர்வாகி சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணியினர் வெள்ளி பதக்கமும் 19 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அணியில் உள்ளவர்கள் விளையாடி ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision