‘விசா’ இல்லாமல்தாய்லாந்து செல்லஇந்தியா்களுக்கு அனுமதி
தாய்லாந்து நாட்டின் 20 சதவிகித வருமானம் சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கிறது. கொரோனா பரவலின்போது இந்த வருவாய் பெரிதும் பாதித்தது. இப்போது மீண்டும் சுற்றுலாப் பயணிகளைக்கவரும் முயற்சியில் தாய்லாந்து ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா இலவசம் என்ற அறிவிப்பு வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து, தற்பொழுது இந்தியா மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளுக்கு விசா இலவசம் என்று பிரதமர் ஸ்ரீதாதவசின் தெரிவித்துள்ளார். விசா இலவசம் நவம்பர் மாதம் முதல் மே 2024 வரை அமலில் இருக்கும். அதன் பிறகு, சுற்றுலாப்பயணிகளின் வரு கையைப் பொறுத்து இதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா இலவசம் என்ற அறிவிப்பினால் 14 லட்சம் பேர் கூடுதலாக தாய்லாந்து வரக்கூடும். இவர்களால் 150 கோடி டாலர் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தாய்லாந்து அரசு கருதுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் வரை 2 கோடி சுற் றுலாப் பயணிகள் தாய்லாந்து வந்துள்ளனர். இவர்களில் 12 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருச்சியில் இருந்து தாய்லாந்துக்கு விமான நிறுவங்கள் விமானங்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.