தமிழ்நாடு அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தமிழ்நாடு அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

ஜல்லிக்கட்டு விழா தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது.தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர்,பாலமேடு என புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெறும் 

ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் புகழ்பெற்றதாகும்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்து சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், உட்பட அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட காளைகளும், காளையர்களும் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்து சூரியூர் கிராமத்தில் புதிய ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் ஒன்று அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இது குறித்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பின் மகேஷ் பொய்யாமொழியிடமும் கோரிக்கை வைத்தனர். இதை அரசின் கவனத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எடுத்துச் சென்றார்.

இந்த கோரிக்கையையடுத்து புதிய ஜல்லிக்கட்டுவிளையாட்டு மைதானம் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கி அதற்கான அரசாணை வெளியிட்டது.இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்து சூரியூர் கிராமத்தில் ரூபாய் 3 கோடியில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு புதிய ஜல்லிக்கட்டு மைதானதற்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநிலங்கலவை உறுப்பினர் திருச்சி சிவா, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இங்கு ஜல்லிக்கட்டு மைதானம் உள்ளது. 

ஜல்லிக்கட்டு மைதானம் மட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் ஆகும் இந்த மைதானம் அமைக்கப்படுகிறது.இந்த மைதானத்தில் அலுவலகம், முக்கிய விருந்தினர் தங்குவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு வீரர்கள் மாற்றுவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தில் இரண்டு பகுதிகளிலும் பார்வையாளர் பார்ப்பதற்கான பிரம்மாண்ட பார்வையாளர் மேடம் அமைய உள்ளது இதில் சுமார் 800 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் உடற்பயிற்சி அரங்கம், உள் விளையாட்டு அரங்கம் ஆகியவை அமைய உள்ளது.அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி புதிதாக அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும்.ஒன்றிய அரசிடம் இருந்து நிதி பெற அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்வது எம்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். நாளை இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் கூட்டம் நடைபெற உள்ளது. அதிலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளோம்.

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி கேட்டாலும் ஒதுக்குவதில்லை, பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை ஒதுக்குவதில்லை.ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறார்கள் என்றார்.முன்னதாக இரு பக்கமும் ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அப்பகுதி மக்கள் வரவேற்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision