100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு அமைச்சர் மகேஸ் சீர்வரிசை

100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு அமைச்சர் மகேஸ் சீர்வரிசை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் AAS மஹாலில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கும், மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மங்களப் பொருட்கள் அடங்கிய சீர்வரிசைகளை 

வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஜனனி மகேஸ் பொய்யாமொழி மண்டலம் மூன்றின் தலைவர் மு.மதிவாணன் மாமன்ற உறுப்பினர் சிவக்குமார் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் மா.நித்யா திருவெறும்பூர் 

போஷன் அபியான் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா. பிரியங்கா

 மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருவெறும்பூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்  சாய்ரா பானுசெய்திருந்தார்..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision