கொரோனா நோயாளிகளின் மூச்சுத்திணறலை கட்டுப்படுத்த திருச்சியில் சித்த மருத்துவ தயாரிப்பான அல்ட்ரா நாசோ கிளியர் மருந்து அறிமுகம்

கொரோனா நோயாளிகளின் மூச்சுத்திணறலை கட்டுப்படுத்த திருச்சியில் சித்த மருத்துவ தயாரிப்பான அல்ட்ரா நாசோ கிளியர் மருந்து அறிமுகம்

கொரோனா நோய்தொற்று காலத்தில் பல மருத்துவமனையில் மற்றும் சிகிச்சை மையங்களில், பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனிடையே கொரோனா தொற்றுக்கு காரணமான சளி மற்றும் நுரையீரல் பிரச்சனைகளை களைய பிரபல சிமென்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ரா சிமென்ட் நிறுவனத்தின், அல்ட்ரா பார்மா ஆயுர்வேத மருந்தின் தயாரிப்பான அல்ட்ரா நாசோ கிளியர் என்ற மருந்து திருச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.காமராஜ் இந்த மருந்தினை அறிமுகம் செய்து வைக்க அதனை அல்ட்ரா பார்மா தலைவர் விஜய்பாஸ்கர் பெற்றுக்கொண்டார். 2 சொட்டு நாசோ கிளியர் ஆயிலை மூக்கில் விடும் போது நுரையீரலிலிருந்து சளியை வெளியேற்றி விடுவதாகவும், இதனால் மூச்சுத்திணறல் கட்டுப்படுவதுடன், ஆக்சிஜன் தேவையினை குறைக்கிறது.

நோய்தொற்றுக்காலத்தில் இம்மருந்து சிறப்பாக செயல்பட்டு மக்களின் உயிரைக்காக்கும், மக்களிடம் கொண்டு சேர்க்க அரசுகள் உதவ வேண்டும் என்கிறார் இந்நிறுவன தலைவர் விஜய்பாஸ்கர். மேலும் 225 ரூபாய் மதிப்புள்ள இந்த மருந்து இன்றுமுதல் அனைத்து மருந்துகடைகளிலிலும் கிடைக்கும் என்றும், தேவை அதிகரிக்கும்பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

சித்தமருத்துவ அலுவலர் காமராஜ் கூறுகையில்... திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 150 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டு சிறப்பான முன்னேற்றத்தை அளித்துள்ளதாகவும், இது நிச்சயமாக பலனளிக்கும் என்றார்.

மூக்கடைப்பு, ஆஸ்துமா, சைனஸ் தொந்தரவு மற்றும் தொற்று உள்ளவர்கள் 2 சொட்டு மூக்கில் விடும் போது வாசனையின்மை, மூச்சுத்திணறல் படிப்படியாக கட்டுப்படுத்தும், ஆங்கில மருந்து எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் இதனையும் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn