பட்டா வழங்கக்கோரி படையெடுத்த பொது மக்கள்!

பட்டா வழங்கக்கோரி படையெடுத்த பொது மக்கள்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பட்டா வழங்க கோரி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் வசிக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல வேன்களில் வரிசையாக வந்து இறங்கினர்.

Advertisement

இதனால் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை முழுவதும் ஒரே மக்கள் கூட்டமாக இருந்தது. ஊரடங்கு காலத்தில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் திரண்டதால் காவல்துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.