திருச்சியில் ஜூன் 7 முதல் ஜமாபந்தி- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 1432ஆம் பசலி ஆண்டிற்கான (2022-2023) வருவாய் தீர்வாயம். (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும், (07.06.2023) முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஸ்ரீரங்கம் வட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தொட்டியம் வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் திருச்சிராப்பள்ளி , தலைமையில், திருச்சிராப்பள்ளி(கிழக்கு ) வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீரங்கம் தலைமையில் மணப்பாறை வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் இலால்குடி தலைமையில் மண்ணச்சநல்லூர் வட்டத்திலும்,
வருவாய் கோட்டாட்சியர் முசிறி தலைமையில் துறையூர் வட்டத்திலும், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருச்சிராப்பள்ளி தலைமையில் முசிறி வட்டத்திலும், மாவட்ட ஆட்சித் தலைவரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திருச்சிராப்பள்ளி தலைமையில் திருச்சிராப்பள்ளி (மேற்கு வட்டத்திலும், உதவி ஆணையர்(கலால்) திருச்சிராபள்ளி தலைமையில் மருங்காபுரி வட்டத்திலும்,
தனித் துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) திருச்சிராபள்ளி தலைமையில் திருவெறும்பூர் வட்டத்திலும், மண்டல தனித் துணை ஆட்சியர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் கொட்டப்பட்டு திருச்சிராப்பள்ளி தலைமையில் இலால்குடி வட்டத்திலும், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறு உள்ளது.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn