தீயணைப்பு வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய காவேரி மருத்துவமனை
திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலையத்தில் காவேரி மருத்துவமனை தென்னூர் பிரிவு தலைமை நிர்வாகி அன்புச்செழியன் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு வீரர்களுடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். விடிந்தால் தீபாவளி கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொது மக்களை பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து தீயணைப்பு துறை பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இன்று துவங்கிய இந்த 35 தீயணைப்பு வீரர்களின் பணி நாற்பத்தி எட்டு மணி நேரம் தொடரும் என திருச்சி தீயணைப்பு நிலைய மேலாளர் மெல்யுகி ராஜா குறிப்பிட்டார்.
பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு காவேரி மருத்துவமனை தென்னூர் பிரிவு சார்பாக இனிப்புகளை வழங்கி கௌரவித்த அன்புச்செழியன் பேசும்பொழுது இவர்கள் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடாமல் பல குடும்பங்கள் தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாட தியாகம் செய்துள்ளனர். இவர்களுடன் தீபாவளி கொண்டாடுவது மிக மகிழ்ச்சி எல்லையில் காக்கும் வீரர்களைப் போல பண்டிகை நேரத்தில் பொதுமக்களைக் காத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இவர்களுடன் தீபாவளி கொண்டாடுவது மிகச் சிறந்த தருணம் என பேசினார்.
இன்று மாலை 5 மணிக்கு துவங்கிய இவர்களது பணி (05.11.2021) தேதி காலை வரை தொடரும் தொடர்ந்து 48 மணி நேரமும் இயங்கும் அசம்பாவிதம் தீவிபத்து எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவார்கள் நம்மை காக்கும் இவர்களை மகிழ்ச்சியில் சிறிது நேரம் ஆழ்த்துவது மிகுந்த அரிய வாய்ப்பாக கருதுவதாகவும் அன்புசெழியன் குறிப்பிட்டார்.
பொதுநலத்துடன் மக்கள் சேவையில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களுடன் மத்தாப்பு, சங்கு சக்கரங்களை வைத்து காவேரி மருத்துவமனை சத்தியராஜ் உள்ளிட் ஊழியர்களும் கொண்டாடினர்கள்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision