லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு

லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு

திருச்சியில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், குமார், இளங்கோவன் ஆகியோர், செய்தியாளர்களிடம் கூறியதாவது... அரசு பணியாளர், ஆசிரியர்களை உள்ளடக்கிய ஜாக்டோ ஜியோ பேரமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. 

அதனால் இந்த அரசு, 3 அமைச்சர்களை வைத்து, பேச்சு வார்த்தை நடத்தியது. பள்ளி கல்வித் துறை அமைச்சரும், எங்களது கோரிக்கைகளை கனிவோடு கேட்டுக் கொண்டார். நியாயமான கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம், என்று உறுதியளித்து விட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக காலந்தள்ளி வருகின்றனர். கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

ஜனநாயக முறையில் பலமுறை வலியுறுத்தியும் கோரிக்கைகளை நிறைவேற்றாததால், நான்கு கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளோம். இந்த அரசு, போராட்டத்தை எங்கள் மீது திணித்து இருக்கிறது. அதில், இறுதிக்கட்ட போராட்டம் அரசு ஸ்தம்பிக்கும் வகையில், டிசம்பர் 28ல், கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். அந்த நிலையை, இந்த அரசு தவிர்க்க வேண்டும். அரசுடன் சுமூகமான நிலையை கடைபிடிக்கவே விரும்புகிறோம். வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வரே நேரில் வந்து சொன்னதால் தான், இரண்டரை ஆண்டுகள் பொறுமையாக இருந்தோம்.

ஆனால், நாங்கள் கைவிடப்பட்டதாக உணர்வதால் தான், போராட்டம் அறிவிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்களை திருப்திபடுத்தி, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த இந்த அரசு, தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வுதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம், என்று வாக்குறுதி அளித்ததை தான் நிறைவேற்ற வேண்டும், என்று வலியுறுத்துகிறோம்.

நாங்கள் ஏமாற்றப்பட்டதால் தான், இந்த அரசையே எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision