சரியான நபர்கள் கையாண்டால் சட்டம் தோற்காது - உச்சநீதிமன்ற வக்கீல் ஹனிபாபீ பேச்சு

சரியான நபர்கள் கையாண்டால் சட்டம் தோற்காது -  உச்சநீதிமன்ற வக்கீல் ஹனிபாபீ பேச்சு

திருச்சி கிங்ஸ் ரோட்டரி சங்கம் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளைஸ் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய சிறப்பு பேச்சாளர் கூட்டம் திருச்சி ப்ரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி.ஹனிபாபீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சட்டம் ஒருபோதும் தோற்பதில்லை என்ற தலைப்பில் பேசும்போது கூறியதாவது... என்னுடைய வழக்கறிஞர் தொழிலில் வரதட்சணையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் தேடி கொடுத்திருக்கிறேன் தனி கொடுத்தனம் கேட்டு கணவனை கைவிட்ட பெண்களை சேர்த்து வைத்திருக்கிறேன்.

தற்போது சமூகத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நிறைய பெண்களுக்கு ஆண்களால் பிரச்சனைகள் வருகின்றன. இதற்கு நீதிமன்ற மூலமாக தீர்வு கண்டு வருகிறேன் குழந்தைகள் தொடர்பான வழக்குகளையும் அதிகம் எடுத்து நடத்தி வருகிறேன். சட்டத்தை சரியான முறையில் சரியான நபர்கள் கையாண்டால் அது என்றுமே தோற்காது சட்டத்தை கையாளும் நபர்களால் அது சாத்தியப்படும் என்று எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன குறிப்பாக சோசியல் மீடியாவில் நம் குழந்தைகள் மற்றும் அனைவரும் புதைந்து கொண்டிருக்கிறோம்.

விழித்துக் கொள்ளாவிட்டால் ஆபத்தில் முடியும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நமக்கு தேவை அதேபோன்ற பிரச்சினைகள் வரும்போது வெளியே துணிச்சலாக வரவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000த்தின் 2024-25 ஆம் ஆண்டுக்கான மீடியம் பப்ளிசிட்டி ஆபீஸர் கே.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட செயலாளர் எஸ் கிருஷ்ணமூர்த்தி மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் ஜானகி ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நந்தவனம் சந்திரசேகரன் மலேசியா எழுத்தாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர் இதற்கான ஏற்பாடுகளை கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ் தங்கவேல் பட்டர் பிளேஸ் ரோட்டரி சங்க தலைவர் சுபா பிரபு செய்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision