80 வயது பெண்மணியையும் படைப்பாளிகளாக மாற்றுவோம் - புதுவித முயற்சியில் அசத்தும் எழுத்தாளர் லட்சுமிபிரியா!!

80 வயது பெண்மணியையும் படைப்பாளிகளாக மாற்றுவோம் - புதுவித முயற்சியில் அசத்தும் எழுத்தாளர் லட்சுமிபிரியா!!

கொரோனா காலத்தில் தான் பார்த்து வந்த தனியார் நிறுவன பணியை துறந்தவர். இன்று 700க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ள பதிப்பகத்தின் உரிமையாளர் லட்சுமிபிரியா. சொந்த ஊர் ஸ்ரீரங்கமா இருந்தாலும், வளர்ந்தது, படித்து எல்லாம் இந்தியா முழுக்க இருக்க பல ஊர்களில். பள்ளி படிப்பு, இளங்கலை, முதுகலை எல்லாம் வேற வேற மாநிலம் வேற வேற ஊர்களில் முடித்த இவர் தன்னோட டாக்டரேட் படிப்பை திருச்சியில் முடித்துள்ளார். படிப்பை முடித்த திரைத்துறை சார்ந்த தனியார் நிறுவனத்துல பணிபுரிந்தவர் கொரோனா காலத்துல அந்த நிறுவனத்துல இருந்த வெளிய வந்து இரண்டே நாளுல பல விமர்சனங்களை தாண்டி உருவாக்குனது தான் 'pachyderm tales' என்ற பதிப்பகம்.

சிறுவயதிலேயே தன் அம்மாவின் மூலம் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தவர், எழுத்துக்களின் மேல் பெரும் ஈர்ப்புடன் செயல்பட்டு வந்தவரிடம் பேசினோம்.''என்னோட அம்மா ஸ்கூல் டீச்சர், ஆனா அவங்களுக்கு மனப்பாடம் பண்ணி மார்க் வாங்குற அந்த சிஸ்டம் பெரிய ஈடுபாடு இல்ல, ப்ராக்டிகலான, வாழ்க்கைக்கு தேவையான, நம்மை சுத்தி இருக்குற தடைகளை உடைக்குற மாதிரியான கல்வி தான் முக்கியம்னு நினைச்சாங்க, அதுக்கு புத்தகம் தான் வழியா இருக்கும்ங்கிறது அவங்களோட எண்ணம்.

அதுனால வீடு முழுசும் புத்தகம் இருக்கும், எனக்கும் என்னோட அஞ்சாவது வயசுல போட்டில முதல் பரிசு வாங்குனதுக்காக கொடுத்த புத்தகம் தான் முதல் வாசிப்பு, அப்போ நாங்க மும்பையில் இருந்தோம், ஆனா தமிழ் பற்று அதிகமா இருந்ததனால அம்மா பாரதியாரரை அறிமுகப்படுத்துனாங்க. அதுக்கு அப்பறம் வரலாறு, பயணம், கனவு, க்ரைம், விஞ்ஞானம், அறிவியல் அப்படின்னு நாங்க தேடி தேடி பல மொழிகளுல படிச்சது ஏராளம். ஒருநாள் நான் கண்ணு முழிச்சி பாக்கும் போது என்னை சுத்தி புத்தகமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன் இப்போ அது நிறைவேறிடுச்சு என்பவரின் சமையலறையில் கூட கண்டிப்பாக ஒரு புத்தகம் இருக்குமாம்.

இப்படி புத்தகத்திற்குள் சென்றவர் எழுத்து, இலக்கியம் என படிப்பும் வாழ்க்கையும் எழுத்தோட ஒன்றி ஆறாவது படிக்கும்போதே கதைகள் எழுத ஆரம்பித்துள்ளார். 'ஒரு எழுத்தாளரா தன்னை மெருகேற்றிக்கிட்டே தான் படிப்பை முடித்துள்ளார். மற்ற பணிகளுக்கு சென்றவருக்கு சின்ன வயசுல இருந்தே மற்றவர்களை எழுத வைக்க வேண்டும் என்பது ஆசை. மற்றவர்களின் படைப்புகளை எளிதாக எல்லார்கிட்டயும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது அடிமானது ஆசை, அதனாலையே வேலையில இருந்து வெளிய வந்ததும் publication ஆரம்பிச்சிட்டோம்.

சரியாக 2020 ல ஆரம்பிச்ச எங்களோட பதிப்பகத்துல நிறைய புது படைப்பாளிகளை வெளிக்கொண்டு வர நினைத்து எல்லார்க்குள்ளயும் இருக்க திறமையை வெளிக்கொண்டு வர நினைத்தோம், வீட்டில் இருக்க பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள், பால்புதுமையினர்ன்னு அனைவரையும் எழுத வச்சோம், இதில் வயது வித்தியாசமின்றி நிறைய கதைகள், நிறைய அனுபவங்கள் எல்லாம் பகிரப்பட்டது, இதன்மூலம் அறிமுகப்படுத்துறதும், அனுபவப்படுறதுமா இயங்கி கொண்டு வருகிறார்கள். 

இதுவரை 13 மொழிகளில் 700 புத்தகத்திற்கும் மேல் படைக்கப்பட்டு pachyderm tales மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிக சிறிய வயதில் அதாவது 6 வயதில் ஆரம்பித்து, 88 வயது வரை இருக்கும் பலரையும் எழுத வைத்துள்ளனர். முக்கியமாக அரசு பள்ளி குழந்தைகளுக்கான எழுத்து பயிற்சியை கொடுத்து, அவர்களை எழுத தூண்டுறது மூலமா பெரிய மாற்றத்தை கொடுக்க வேண்டும் என நினைத்தோம், அதற்காக பூடான், இந்தனோசியா மாதிரி பல உலக நாடுகளில், மட்டுமில்லாமல் இந்தியாவில் பல மாநிலத்துல இருக்க குழந்தைகளை தேடி தேடி பயிற்சி கொடுத்தோம்.

அங்க அவங்க எழுதி கொடுக்கும் கதைகளை அவங்களோட ஆசிரியர்களையே எடிட்டராக்கி வெளியிட்டுள்ளனர், இப்படி இதுவரை 7000 குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்து, 600 கதைகளை சேர்த்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு 70 வயதுக்கு மேற்பட்ட உள்ள முதிர் கன்னிகளை கொண்டு 60 புத்தகங்களை தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகளை கொண்டு வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது., தன்னுடைய பப்ளிகேஷன் மூலம் Translation, Ghost Writing, அரசு பள்ளி மாணவர்களுக்கு Writing Skill Training என பலவற்றை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து எழுத்தாளர் என்ற அடைமொழியை தாண்டி, ஒரு ஓவியராக, பயணியாக பல அடையாளங்களில் திகழும் 30 வயதான லட்சுமிபிரியா தற்போது 108 திவ்யதேசங்களை குறித்த விவரங்களை எழுதி வருகிறார், கூடவே நம்மை சுற்றி உள்ள வரலாறுகளை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்றும் அதற்கான முன்னெடுப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

பெண்கள் எப்போதும் எந்த சிறுவேளைக்கும் யாரையும் எதிர்பார்க்க கூடாது, குறிப்பாக பஞ்சர் ஓட்டுவது, தன்னுடைய பேகை தானே எடுத்துக்கொள்வது போன்றவற்றில் எல்லாம். எப்போதும் தனக்கு தேவையான மூன்று மாதத்திற்கான பணத்தை சேகரித்து வைத்து கொள்வது, தன்னை சுற்றி இருக்கும் புனிதம் என்கிற பிம்பமும், தியாகம் என்னும் ஏமாற்றதையும் உடைத்து வெளியே வருதல் மிக முக்கியம், அப்படியான சமூகத்தை கண்டிப்பாக உருவாக்குவேன் என்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision