திருச்சியில் பழம்பெரும் கோயிலை இடிக்காமல் இருக்க எம்.பி கடிதம்

திருச்சியில் பழம்பெரும் கோயிலை இடிக்காமல் இருக்க  எம்.பி  கடிதம்

கொட்டப்பட்டு சுற்றுவட்டார கிராம மக்களின் உணர்வுபூர்வமான கோரிக்கைக்காக, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்தேன். இதே கோரிக்கையை திருச்சி விமான நிலைய இயக்குனரிடம் கொண்டு சேர்த்தேன். 

திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்காக, கொட்டப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ பச்சநாச்சி அம்மன் ஆலயம் இடிக்கப்படாமல் இருக்க, அப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், நேற்று (15.04.2025) அந்த கோவிலுக்கு சென்று பார்வையிட்டேன். அப்போது அவர்களிடம் உரையாடிய போது கோவில் இடிக்கப்படாமல் இருக்க நீங்கள் என்ன முயற்சிகள் மேற்கொள்வீர்களோ அதுபோலவே நானும் முயற்சி மேற்கொள்வேன் என்றும், அதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க உள்ளேன் என்றும் தெரிவித்திருந்தேன். 

அதன்படி இன்று 16.04.2025 காலை 9:30 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து இது குறித்த எனது கோரிக்கை கடிதத்தை கொடுத்து, அக்கோவிலில் வழிபடும் 18 கிராம மக்களின் உணர்வுகளை எடுத்துக் கூறினேன். 

அனைத்தையும் கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், இதுபற்றி கவனம் கொள்வதாக தெரிவித்தார். இதே கோரிக்கையை விமான நிலைய இயக்குனரிடமும் எடுத்துக்கூறி தொலைபேசியில் பேசிய பின்பு, அவரால் அனுப்பி வைக்கப்பட்ட விமான நிலைய அதிகாரியிடம் விமான நிலைய வளாகத்தில் இன்று மதியம் 2 மணியளவில் எனது கோரிக்கை கடிதத்தை வழங்கினேன். 

துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்ட செயலாளர்கள் திருச்சி புறநகர் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி புறநகர் வடக்கு டி.டி.சி சேரன், தலைவர் வைகோ அவர்களின் உதவியாளர் வெ.அடைக்கலம் ஆகியோர் உடனிருந்தனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision