மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் கண்டித்து ஆர்ப்பாட்டம்!நேஷனல் ஹெரால்ட் வழக்கில் மோடி அரசியல் பழிவாங்கல்!
அன்னை சோனியா காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை வன்மையாக கண்டிக்கும் வகையில் இன்று (16-04-25) திருச்சி நீதிமன்றம்
முன்பு காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் வழக்குரைஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் மூத்த வழக்கறிஞர் மகேந்திரன் முருகையா மாநிலச் செயலாளர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் அல்லூர் பிரபு வனஜா மார்க் மதிவாணன் அப்துல் சலாம் விக்னேஷ் நவமணி வேல் சுப்பிரமணி பிரசாந்த் சரவணகுமார் சுகன்யா சிந்து கௌசல்யா அமர்த்தியா சிவபதி ஸ்டாலின் விகாஸ் சிவகாமி கோகுல் வக்கீல் ராஜேந்திரகுமார் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
கட்சி நிர்வாகிகள் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் அண்ணா சிலை விக்டர் மலைக்கோட்டை சொக்கலிங்கம் மலைக்கோட்டை சேகர் மார்க்கெட் மாரியப்பன் உறையூர் மகாராஜா மார்க்கெட் சம்சுதீன் சண்முகம் வைரவேல் நியூ லுக் யாசர் கோகுல் பாலக்கரை கிருஷ்ணா கிருஷ்ணமூர்த்தி கோகுல் ராஜ் நிர்மல் குமார் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision