ஈரோட்டில் காணாமல் போன ஐந்து மாணவிகள் திருச்சிகாவல் ஆய்வாளரால் மீட்பு

ஈரோட்டில் காணாமல் போன ஐந்து மாணவிகள் திருச்சிகாவல் ஆய்வாளரால் மீட்பு

ஈரோடு மாவட்டம் பவானி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (15. 04.2025) 10-ம் வகுப்பு இறுதித்தேர்வு எழுதி முடித்த ஐந்து மாணவிகளை காணவில்லை என மாணவிகளின் பெற்றோர்

இரவு 9:15 மணிக்கு பவானி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.வழக்கு பதிவு செய்யப்பட்டு மாணவிகள் குறித்து விசாரித்த வகையில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. உடனடியாக ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் திருமதி ஏ சுஜாதா

அவர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம் அவர்களை தொடர்பு கொண்டு இத்தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாட்சப் குரூப் களிலும் பகிர்ந்து காணாமல் போன பள்ளி மாணவிகளை கண்டுபிடிக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.

 இது தொடர்பாக திருச்சி மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் அதி தீவிரமாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் இந்நிலையில் இரவு 12:58 மணிக்கு சமயபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் நின்று கொண்டிருந்த மேற்கண்ட 5 பள்ளி மாணவிகளையும் இரவு ரோந்து அதிகாரி வீரமணி காவல் ஆய்வாளர் 

அவர்கள் மீட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றார்.அங்கு அலுவலில் இருந்த திருமதி ஜெயசித்ரா காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார்.இது சம்பந்தமாக உடனடியாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பகவதி அம்மாள் பவானி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களிடம் இன்று 16.4.2025 காலை 4:00 மணிக்கு 5 பள்ளி மாணவிகளையும் திருச்சி சமயபுரத்தில் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது. பள்ளி மாணவிகள் காணாமல் போனது சம்பந்தமாக ஈரோடு மாவட்டத்தில் இருந்த தகவல் கிடைத்த மூன்று மணி நேரத்தில் திருச்சி மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு

மாணவிகளை மீட்டுள்ளது பொது மக்களிடம் மிகவும் பாராட்டை பெற்றுள்ளது.இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் அவர்கள் மற்றும் ஈரோடு காவல் கண்காணிப்பாளர்  ஏ சுஜாதா அவர்களும் வெகுவாக பாராட்டி உள்ளார்கள்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision