கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்ஒன்றிய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி உள்ளது.ஏழை எளிய மக்கள் இதனால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே சி.ஐ.டி.யூ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டரை வைத்து அதன் மேல் விறகு அடுப்பு வைத்து சமைப்பது போல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்தும், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision