சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு ஆயுள் தண்டனை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரமங்கலம் கிராமத்தில் கடந்த (29.08.2019 )ஆம் தேதி சற்று மனநிலை சரியில்லாத 15 வயது குழந்தையை கொண்டு சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு
உட்படுத்தியது சம்பந்தமாக குழந்தையின் சித்தப்பா கொடுத்த புகாரின் அடிப்படையில் செல்வராஜ் (48) பெரமங்கலம்,முத்து (58) கீழசிந்தாமணி, செல்வராஜ் (50)ராம் என்கின்ற ராமராஜ் (40) திருவள்ளரை, ஆகியோர் மீது ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் 5/19U/சரி5(l) 5(j)(¡¡)5(k)r/w6(1) of POCSO ACT -ன் படிவழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை திருச்சி மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞரான செல்வி. சுமதி ஆஜராகி வாதிட்ட நிலையில் மகிலா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ வத்சன் அவர்கள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 10,000 பணமும் ஏக காலத்தில் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். மீதமுள்ள குற்றவாளிகள் A2-A4 குற்றம் நிரூபிக்கப்படாதால் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்தமைக்காக ஜீயபுரம் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் ஆளிநர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ. செல்வராகரத்தினம் அவர்கள் பாராட்டினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision