திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மணிமண்டபம் கட்டும் பணி - ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மணிமண்டபம் கட்டும் பணி - ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணி மண்டபம் மற்றும் நூலகம் கட்டும் பணியானது கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Advertisement

1 கோடியே 85 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்துவரும் இந்தப் பணியினை இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் அவர் கூறும் பொழுது..... மணிமண்டபங்கள் மற்றும் நூலக பணியானது பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை (கட்டிடம்)செயற் பொறியாளர் சிவகுமார், உதவி பொறியாளர் பாலமுருகன், ஒப்பந்ததாரர் புஷ்பராஜ் உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement