திருச்சியில் நெகிழியில்லா பசுமையை உணர்த்தும் திருமணம்
நாட்டை பசுமையாக்கி சமுதாயத்திற்கு பசுமையின் முக்கியத்துவத்தை தொடர்ந்து கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக எங்கு சென்றாலும் மரங்களின் முக்கியத்துவத்தை தொடர்ந்து உணர்த்தி மரக்கன்றுகளை ஷைன் திருச்சி அமைப்பு சார்பாக மக்களுக்கு மரம் வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் மனோஜ்தர்மர்.
இன்று திருச்சி வயலூர் முத்துலெட்சுமி அம்மாள் திருமண மண்டபத்தில் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் விழாவிலும் நெகிலியில்லாமல் நடைபெற்றது.தனது திருமண விழா அழைப்பிதழ் மண்ணுக்கு சென்றாலும் விதை விருட்சமாக உருவாகும் வகையில் அழைப்பிதழை அமைத்துள்ளார். வெறும் வார்த்தை இல்லாமல் செயலிலும் மற்றவர்களுக்கு கொண்டு முன்னுதாரணமாக செயல்படுத்தியும் காட்டிவிட்டார்.
இதையடுத்து வார்த்தையளவில் மரம் நடுவது இருக்கக்கூடாது குறுங்காடுகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வாழ்ந்துவரும் இவர் தனது இல்லற வாழ்க்கையில் தொடங்கிய நாளிலேய ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு தனது சமூக பணியை தொடர்ந்து கொண்டே இருப்பேன் என பசுமரத்தாணி போல் நிரூபித்து விட்டார். புதுமண தம்பதிகளுக்கு திருச்சி விஷன் சார்பாகவும் நேயர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn