மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிஷப் ஹிபர் கல்லூரி சமூக பணித்துறை மற்றும் விரிவாக்க புல பணித்துறை மற்றும் அன்பாலயம் வீடற்ற மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு தங்குமிடம் இணைந்து போதாவூர் ஊராட்சியில் மனநலம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் பான்யன் திட்ட இணைஅதிகாரி திரு.சக்திவேல் பிள்ளை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொது மக்களுக்கு புரியும் வகையில் மிக எளிமையாகவும் அழகாகவும் சிறப்புரை வழங்கினார். அதனை தொடர்ந்து மக்களுக்கு மனநலம் தொடர்பான தொலைபேசி எண் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் போதவூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.முத்தையா மற்றும் பிஷப் ஹிபர் கல்லூரி விரிவாக்க புல பணித்துறை அதிகாரி திரு.நெல்சன் அவர்களும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் 45க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பாலயம் வீடற்ற மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு தங்குமிடம்மற்றும் பிஷப் ஹிபர் கல்லூரி சமூக பணித்துறை உதவிப் பேராசிரியர் Dr.A. சாம்சன் தலைமையில் கோமதி சங்கர்.ந, முதுகலை முதலாமாண்டு மாணவரும் சேர்ந்து சிறப்பாக செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO