புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுர் மாவட்டம், பட்டாபிராம், இந்துக் கல்லூரியில் இன்று (08.02.2023) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு  வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' இரண்டாம் கட்டத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் ஆயிரம் பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி உரையாற்றினார்.

இந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலர் மா.நித்யா, மாவட்ட திட்ட அலுவலர் (ஒ.கு.வ.தி) பொ.ரேணுகா, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன், மாநகராட்சி உதவி ஆணையர் ச.நா.சண்முகம், கோட்டத்தலைவர் துர்காதேவி, 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெ.கலைச் செல்வி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn