குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட காவேரி மற்றும் கொள்ளிடம் நீரேற்று நிலையங்களில் பராமரிப்பு பணி மற்றும் அபிவிருத்தி பணி நடைபெற்று வருகிறது.
இதன் வாயிலாக பெரியார் நகர் கலெக்டர் வெல் மற்றும் தலைமை நீர்ப்பணி (Well-I & Well-II) நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான அரியமங்கலம், மலையப்ப நகர், ரயில் நகர், மேலகல்கண்டார் கோட்டை, முன்னாள் ராணுவத்தினர் காலனி, பொன்னேரிபுரம், விவேகானந்தா நகர், அம்பேத்கார் நகர், மத்திய சிறைச்சாலை, சுந்தர்ராஜன் நகர், ஜே.கே நகர், செம்பட்டு, காஜா மலை EB காலனி, காஜா மலை, ரங்கா நகர், சுப்ரமணிய நகர், வி.என் நகர், தென்றல் நகர், கவிபாரதி நகர், காமராஜர் நகர், கிராப்பட்டி, அன்பு நகர், எடமலைப்பட்டி புதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் EB காலனி, கண்டோன்மென்ட், MM Nagar, மரக்கடை மற்றும் விறகுப் பேட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் வரையறுக்கப்பட்ட குடிநீர் அளவை காட்டிலும் குறைவாக செய்யப்பட்டு வருகிறது.
இப்பணிகள் போர்க்கால அடிப்படையில் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படவுள்ளது.
எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision