நவல்பட்டு ஊராட்சி பெரியார் சமத்துவபுரம் மகாகவி பாரதி இளைஞர் நலச் சங்கம் துவக்க விழா

நவல்பட்டு ஊராட்சி பெரியார் சமத்துவபுரம் மகாகவி பாரதி இளைஞர் நலச் சங்கம் துவக்க விழா

இளைய சமுதாயம் ஒன்றிணைந்தால்     எதிர்கால இந்தியாவை உயர்த்த முடியும் என்பது என்பது பெரியோர்கள் கூற்று. உலகம் மக்கள் தொகையில் அதிக   இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு உள்ள இந்திய இளைஞர்கள் தேசப் பற்றும் மொழிப் பற்றும் சமூக அக்கறை கொண்டு செயல்படுவார்களாயின்   அந்நாட்டின் அரண்களாக இளைஞர்களே அடுத்த தலைமுறையை வழி நடத்துவார்கள்.  

தன்னார்வலர்களாக தங்களை சமூக செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் சமூக அக்கறையோடு இன்னும் முனைப்பாய்     செயல்பட வேண்டும் என்பதற்காக திருச்சி திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட  நவல்பட்டு ஊராட்சி பெரியார் சமத்துவபுரம் இளைஞர்கள் இணைந்து மகாகவி பாரதி இளைஞர் நல சங்கத்தை தொடங்கி உள்ளனர்.

இதனுடைய தொடக்க விழா சுதந்திர தினமான நேற்று நடைபெற்றது. மன்றத்தின் துவக்க விழாவிற்கு நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். துவக்க விழாவிற்கு அக்னி சிறகுகள் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வரவேற்புரை வழங்கியதோடு அப்பகுதி இளைஞர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக நேரு யுவகேந்திரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ருதி மற்றும் திருச்சி நேரு யுவகேந்திராவின் கணக்காளர் ஆர்.மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.துவக்க விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திருவெறும்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவை சிறப்பித்துள்ளார்.

மகாகவி பாரதி இளைஞர் நலச்சங்கத்தை சேர்ந்த மதுசூதனன் துவக்க விழா குறித்து கூறுகையில்... தன்னார்வத்தோடு பல சமூக அக்கறை செயல்பாடுகளில் ஈடுபட்ட போதும் இதனை இன்னும் அக்கறை கொண்டு செயல்படுவதற்கு அரசு அங்கீகாரம் பெற்றுள்ள இந்த சங்கம் உதவும். இதன் மூலம் இன்னும் பல சமூகப் பணிகளில் ஈடுபடுவோம்.

எதிர்கால இளைய தலைமுறைகளுக்கு இப்பகுதி இளைஞர்கள் எடுத்துக்காட்டாக சமூக செயல்பாடுகளில் ஈடுபட அனைவரும் ஆர்வத்தோடு இருக்கின்றோம் என்றார். மேலும் இத்தனை பெரிய ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு முனைப்போடு பாரதியின் வரிகளை கொண்டே அச்சமில்லை அச்சமில்லை என்று உயிர்ப்போடு செயல்படுவோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn