அண்ணா அறிவியல் மையத்தில் உள்ள கோளரங்கம் 2 நாட்கள் மூடல்

அண்ணா அறிவியல் மையத்தில் உள்ள கோளரங்கம் 2 நாட்கள் மூடல்

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் விமானநிலையம் அருகே அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் அமைந்துள்ளது. இங்குள்ள கோளரங்கத்தில் நாளை (29.01.2024) (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (30.01.2024) (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

எனவே 2 நாட்கள் கோளரங்கம் செயல்படாது. முப்பரிமாண காட்சி, அறிவியல் பூங்கா, சுற்றுச்சூழல் காட்சிக்கூடம், பரிணாமவளர்ச்சி பூங்கா ஆகியவை வழக்கம்போல் செயல்படும் என்று அறிவியல் மைய திட்ட இயக்குனர் ரா.அகிலன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision