ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் போலீசார் ஏழு மணி நேரம் சோதனை - ஆவணங்கள் பறிமுதல்
போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்து உள்ளதாக பொதுமக்களிடமிருந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு வந்த புகார் வந்தது. இதனை தொடர்ந்து நில மோசடி தொடர்பாக திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை லட்சுமிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மோகன் பட்டேல் என்பவரது வீட்டில் திருச்சி மாநகர போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ள வந்தனர்.
அப்போது வீட்டில் உள்ளவர்கள் சோதனை செய்ய போலீசாரை அனுமதிக்கவில்லை. இரவு நேரம் என்பதால் போலீசார் உள்ளே செல்லாமல் மீண்டும் காலையில் சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் வீட்டை சுற்றி போலீசார் காவல் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
இந்த மோகன் பட்டேல் என்பவருக்கு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நில மோசடி தொடர்பான வழக்குகள் உள்ளது மற்றுமின்றி திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களிளும் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பழனிச்சாமி தலைமையிலான போலீசார் நீதிமன்ற ஆணைப்படி மோகன் பட்டேல் வீட்டில் சோதனை நடத்த வந்தனர். அப்போது வீட்டின் வெளி கேட் பூட்டப்பட்டிருந்தது. வீட்டினுள் இருந்த நபர்கள் கதவைத் தட்டி நீண்ட நேரம் ஆகி திறக்காததால் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் போலீசார் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர்.
மதியம் 2:30 மணிக்கி ஆரம்பித்த சோதனை தொடர்ந்து ஏழு மணி நேரம் நடைபெற்றது. இதில் மோகன் பட்டேலின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் கைப்பற்ற ஆவணங்களை போலீசார் கணக்கெடுத்து பதிவு செய்து அவரது மகள் பூர்ணிமா பட்டியலில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர். மீண்டும் சோதனை நடைபெறும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனையானது திருவெறும்பூர் பகுதியில் 3 இடங்களில் நடைபெற்றது. துவாக்குடி நவல்பட்டு மற்றும் அரியமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision