‌ திருச்சி எஸ்ஆர்எம் கல்லூரியில் பரிசு மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கும் விழா

‌ திருச்சி எஸ்ஆர்எம் கல்லூரியில் பரிசு மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கும் விழா

SRM திருச்சி குழுத்தின் கீழ் இயங்கும் திருச்சி கல்வி வளாகத்திற்கு இன்றைய நாள் ஒரு மகிழ்ச்சியான நாளாக விளங்குகிறது. SRM கலையரங்கில் இன்று, SRM திருச்சி மருத்துவக் கல்லூரி, SRM TRP பொறியியல் கல்லூரி, SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், SRM துணை மருத்துவ அறிவியல் கல்லூரி, SRM செவிலியர் கல்லூரி, SRM திருச்சி கலை அறிவியல் கல்லூரி மற்றும் SRM உணவக மேலாண்மை கல்லூரி சார்பாக திட்டம் - 2022 (16.06.2022 மற்றும் 17.06.2022) ஆகிய நாட்களில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

அந்த நிகழ்வில் 202-க்கும் மேற்பட்ட திட்ட செயல்பாடுகளை மாணவர்கள் அன்றைய தினம் விளக்கிக்காட்டினர். அதனை முன்னிட்டு கல்லூரியின் நடுவர் குழுவினர் ஒவ்வொரு திட்ட விளக்க கூடத்திற்கும் சென்று மாணவர்களின் புதுமையான சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் எடுத்துரைத்த விதம் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்விற்கு SRM திருச்சி மற்றும் இராமாபுரம் வளாகத்தின் தலைவர் டாக்டர் R.சிவக்குமார் அவர்கள் தலைமையேற்று மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் படைப்பாக்கத்தின் முக்கியத்தை எடுத்துரைத்து தலைமை உரையாற்றினார். இன்றைய இளம் மாணவர்கள் எதிர்கால வலிமையான சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்று SRM திருச்சி மற்றும் இராமாபுரம் வளாகங்களின் முதன்மை இயக்குநர் முனைவர் N.சேதுராமன் அவர்கள் வலியுறுத்தி வாழ்த்துரை வழங்கினார். SRM திருச்சி வளாகத்தின் இயக்குநர் டாக்டர் N.மால்முருகன் அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில் புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை மாணவர்கள் செயல்படுத்த வேண்டும் என்று இளம் படைப்பாளர்களை ஊக்கப்படுத்தி, அதற்கு இந்த திட்ட நாள் உங்களுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது பேசினார். என்பதை தனது வாழ்த்துரையில் வலியுறுத்தி

SRM திருச்சி வளாகத்தின் இணை இயக்குநர் டாக்டர் N.பாலசுப்பிரமணியன் அவர்கள் மாணவ சமுதாயம் எதிர்காலத்திற்கு தேவையான மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த பல்வேறு திட்டங்களின் நோக்கத்தை எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்.

SRM TRP பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் B.கணேஷ்பாபு அவர்கள் இந்நிகழ்விற்கு வரவேற்புரை வழங்கினார்.விழாவின் சிறப்பம்சமாக டாக்டர் R.சீனிவாசன் (Member Secretary, Tamilnadu State Council for Science and Technology, DOTE Campus, Chennai 25)  சுவாமி விவேகானந்தர் மற்றும் டாக்டர் APJ அப்துல்கலாம் அவர்களின் சிந்தனைகளையும் நமது முன்னோர்களின் கணிதத் திறன்களை சூத்திரத்தின் வாயிலாக விளக்கி உரைத்தார். தகவல் தொழில் நுட்பத்தில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் முன்னனி நாடுகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

ஆராய்ச்சி திட்டங்களை எவ்வாறு பெறுவது அரசு எவ்வாறு அதற்கு உதவி செய்கின்றது என்பதையும் ஆக்க பூர்வமான புதுமை படைப்புகளை எவ்வாறு வெளிகொணர்வது திறன் பேசிகளை அவசியம் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி மேலும் அறிவு நம்மை காக்கும் கோட்டை என்பதை திருக்குறள் வாயிலாக எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை வழங்கினார்.

விழாவின் நிறைவாக SRM திருச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் புல் முதன்மையர் முனைவர் R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நன்றியுரை வழங்கினார். விழாவில் SRM திருச்சி வளாகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் புல முதன்மையர்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO