நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மீறிய ரவுடிக்கு 142 நாட்கள் சிறை தண்டனை
திருச்சி மாநகரம் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி பன்னாடை (எ) அக்பர்கான் வயது 33 த.பெ.நாசிர்கான் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், மேற்படி ரவுடி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக. கோட்டை காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி ரவுடியை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன். குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மேற்படி ரவுடி பன்னாடை (எ) அக்பர்கான் தாக்கல் செய்துள்ளார்.
மேற்படி பன்னாடை (எ) அக்பர்கான் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல், இரும்பு கம்பியை வைத்து ஆட்டோ டிரைவரை மிரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் ரவுடி மீது கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டும் விசாரணை செய்தும், மேற்படி ரவுடி பன்னாடை (எ) அக்பர்கான் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 142 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு. மேற்படி ரவுடி பன்னாடை அடைக்கப்பட்டார். அக்பர்கான் உடனடியாக திருச்சி மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO