கிணற்றில் தவறி விழுந்த 3 வயது ஆண் புள்ளிமானை உயிருடன் மீட்ட சமயபுரம் தீயணைப்பு வீரர்கள்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சி வடக்குப்பட்டியில் உள்ள வீனி பண்ணையருகே செல்வக்குமாருக்கு சொந்தமான கிணற்றில் இரை தேடிவந்த புள்ளிமான் தவறி விழுந்தது. இதை கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்டனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஒமாந்தூர்
வனவர் சரவணிடம் ஒப்படைத்தனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் திருச்சி வன ரேஞ்சர் குணசேகரன் அறிவுறுத்தலின் பேரில் ஓமீந்தூர் பீட் வனக்காப்பாளர்களுடன் சேர்ந்து வெள்ளக்கள்பட்டி வனப்பகுதியில் மானை பத்திரமாக விட்டனர். வனப்பகுதிக்கு கொண்டு சென்ற 3 வயது புள்ளிமான் துள்ளிக் குதித்து வனப்பகுதியில் ஓடிச் சென்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK