திருச்சியில் பள்ளிகளில் 108 தேங்காய் உடைத்தும் ஆடல் பாடலுடன் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
திருச்சியில் பள்ளிகளில் 108 தேங்காய் உடைத்தும் குழந்தைகள் கையில் இதய வடிவில் கார்டுகளுடன் ஆடல் பாடலுடன் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபபட்டது.
திருச்சி மாவட்டத்தில் 1200 க்கும் மேற்பட்ட பள்ளிகள் 1ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகள் ஆறு நூறு நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டடுள்ளது. இதையொட்டி திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தம் பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு மலர்கள் கொடுத்து வரவேற்றார்.
தலைமையாசிரியர், ஆசிரியர் ,பெற்றோர், மாணவர்கள் என அனைவரும் 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தி தங்கள் வகுப்புகளுக்கு மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது .
இதேபோல் மேலப்புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறு குழந்தைகளுக்கு தங்களது வகுப்பறைகளில் பலூன்களை கட்டியும் வரக்கூடிய ஒவ்வொரு குழந்தை கையில் தங்களுடைய பெயரை எழுதி இதய வடிவில் கார்டுகளாக ஆசிரியர் கட்டிவிட்டு பரிசுப் பொருட்களைக் கொடுத்து வரவேற்றனர்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பள்ளியில் மேளதாளம் முழங்க நாதஸ்வரம் இசையுடன் மிக்கி மவுஸ் போன்ற உடையில் பள்ளி மாணவர்களை வரவேற்றனர்.
மணிகண்டம் ஒன்றியம் பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய பறை இசை, சிலம்பாட்டத்துடன் மாணவர்களை பொதுமக்கள் வரவேற்றனர்.
மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தங்களது ஆசிரியர்களையும் சக நண்பர்களையும் காண ஆர்வமுடன் பள்ளிக்கு வந்து உள்ளனர்.