ஷேர் (Shair) தலைமுடி தானமளிப்பு திட்டம்! திருச்சி, காவேரி கல்லூரியில் க்ரீன் ட்ரெண்ட்ஸ் நடத்திய நிகழ்வு

ஷேர் (Shair) தலைமுடி தானமளிப்பு திட்டம்! திருச்சி, காவேரி கல்லூரியில் க்ரீன் ட்ரெண்ட்ஸ் நடத்திய நிகழ்வு

கவின்கேர் குழுமத்தின் ஒரு அங்கமான க்ரீன் ட்ரெண்ட்ஸ் - ஹேர் மற்றும் ஸ்டைல் சலூன், புற்றுநோயாளிகளுக்கு உணர்வு ரீதியான ஆதரவையும், நம்பிக்கை ஒளிக்கீற்றையும் வழங்கும் ஒரு முயற்சியாக தலைமுடி தானமளிப்புக்கான ஷேர் (Shair) என்ற திட்டத்தை நாடு முழுவதும் இப்போது செயல்படுத்துகிறது. இந்த சீரிய நோக்கத்திற்காக இளம் கல்லூரி மாணவிகளின் பங்கேற்பை ஏதுவாக்க, திருச்சி காவேரி கல்லூரியின் மாணவிகளுக்காக தலைமுடி தானமளிப்பு முகாமை க்ரீன் ட்ரெண்ட்ஸ் நடத்தியது. இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் செயல்திட்டத்தில் ஏறக்குறைய 2000 மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும் வெகு ஆர்வத்தோடு பங்கேற்று அவர்களது தலைமுடியை தானமாக வழங்கினர். புற்றுநோய் சிகிச்சை மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காகவும் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தலைமுடியை இழந்த நோயாளிகளுக்கு விக்குகளை தயாரிப்பதற்கும் இச்செயல்நடவடிக்கை பெரிதும் உதவும். 

இத்தானமளிப்பு நிகழ்வில் பங்கேற்ற காவேரி கல்லூரியின் மாணவிகளும், ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 10 அங்குல நீளமுள்ள தலைமுடியை தானமாக வழங்கினர். இவ்வாறு தானமளிப்பதால், அவர்களது தோற்றத்திற்கு எந்த வெளிப்படையான பாதிப்போ அல்லது மாற்றமோ ஏற்படாதவாறு சிகை அலங்கார நிபுணர்கள் பிரத்யேக ஹேர் கட்டிங் வழிமுறையை செயல்படுத்தினர். தானமளித்த நபர்களுக்கு பிங்க் நிறத்திலான ஹேர் க்ளிப் ஒன்றையும், தானமளித்ததற்கான ஒரு பாராட்டு சான்றிதழையும் க்ரீன் ட்ரெண்ட்ஸ் அவர்களுக்கு வழங்கியது. இந்த தலைமுடி தானமளிப்பு நிகழ்வை நடத்துவதற்காக கல்லூரி வளாகத்தில் க்ரீன் ட்ரெண்ட்ஸின் சிறப்பு பயிற்சி பெற்ற 30 சிகையலங்கார நிபுணர்கள் அடங்கிய குழு பங்கேற்றது. 

கவின்கேர் – சலூன் டிவிஷனின் பிசினஸ் ஹெட் திரு. கோபாலகிருஷ்ணன் இந்த செயல்திட்ட அறிமுகம் குறித்துப் பேசுகையில், “ஷேர் என்ற செயல்திட்டமானது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விக்குகளை தானமாக வழங்குவது என்பதற்கும் மிக அதிகமானது. ஒருவரால் கற்பனையில் நினைத்துப் பார்ப்பதை விட மிகக் கடினமான ஒன்றான புற்றுநோயுடன் இந்த யுத்தத்தை நடத்துகின்ற நபர்களுக்கு ஒரு மாற்றத்தை உருவாக்குவது அவர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை வழங்குவது மற்றும் சுயநம்பிக்கையை உருவாக்குவது என சிறப்பான நோக்கங்களின் ஒரு கலவையாக இச்செயல்திட்டம் எங்களால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

தலைமுடி தானமளிப்பிற்காக ஒரு திறமையான மற்றும் வெளிப்படையான அமைப்பு முறையை “ஷேர்” மூலம் வெற்றிகரமாக நிறுவி செயல்படுத்துவதை நாங்கள் சாதித்திருக்கிறோம்.. இதில் மக்கள் அவர்களது தலைமுடியை தானமாக அளிப்பது மற்றும் சமூகத்திற்கான அவர்களது பங்களிப்பை செய்வது என்பதற்கும் மேலாக, விக்குகளைத் தயாரித்து நாங்கள் தானமாக வழங்குவதை நேரடியாக அவர்கள் பார்க்க இயலும் என்பது இத்திட்டத்தின் ஒரு சிறப்பம்சமாகும். திருச்சி மாநகரில் எமது சிறப்பான பிரான்சைஸிகள் மற்றும் சிகையலங்கார நிபுணர்களோடு இந்த உன்னத நோக்கத்திற்கான இந்நிகழ்வை வெற்றிகரமாக ஆக்குவதற்காக உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் பங்கேற்றது க்ரீன் ட்ரெண்ட்ஸில் எங்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தந்திருக்கிறது,” என்று கூறினார்.  க்ரீன் ட்ரெண்ட்ஸ் சலூனின் தலைமை இயக்க அதிகாரி (COO) தீபக் ப்ரவீன் கூறியதாவது: “திருச்சியில் காவேரி மகளிர் கல்லூரி வளாகத்தில் முதன் முறையாக தலைமுடி தானமளிப்புக்கான எமது ஷேர் திட்டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் அதிக உற்சாகம் கொண்டிருக்கிறோம். பொருளாதார ரீதியாக வசதியற்ற நிலையிலுள்ள புற்றுநோய் பாதிப்புள்ளவர்களுக்கு திறனதிகாரம் பெறச் செய்வது என்ற ஒரு எளிய கோட்பாடே ஷேர் திட்டத்தின் அடிப்படையாகும். தலைமுடி இழப்பு / உதிர்தல் என்பது புற்றுநோய் சிகிச்சை தொடர்பான ஒரு பொதுவான பக்கவிளைவாகும்.

செயற்கை தலைமுடியைக் கொண்டு தயாரிக்கப்படும் விக்குகள், விரும்பத்தகாத பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால், மனிதர்களது தலைமுடியைக் கொண்டு உருவாக்கப்படும் விக்குகள் அதிக சவுகரியமானதாக இருப்பதோடு, ஒட்டுமொத்தத்தில் அழகான தோற்றத்தையும் தருகின்றன. நல்ல தலைமுடி, ஒருவரது நம்பிக்கையை அதுவும் குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்காக உடல்ரீதியான மற்றும் உணர்வு ரீதியான கடும் சிரமமான சிகிச்சைக்குப் பிறகு, பெரிதும் அதிகரிக்கும். எவ்வளவு அதிகமாக ஒருவர் தலைமுடியை தானமளித்த போதிலும் அவரது ஹேர் ஸ்டைலை கடுமையாக மாற்றாத ஒரு தனித்துவமான ஹேர்கட் முறையான ‘ஷேர்கட்’ என்பதனையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். இந்த சீரிய நோக்கத்தின் ஒரு அங்கமாக இந்தியாவில் 50+ நகரங்களில் இயங்கும் எமது 375க்கும் கூடுதலான சலூன்கள் அனைத்திலும் 3000-க்கும் அதிகமான சிகை அலங்கார நிபுணர்களுக்கு நாங்கள் பயிற்சியளித்திருக்கிறோம். புற்றுநோய் சிகிச்சை மீதும் மற்றும் இந்நோக்கத்திற்காக தலைமுடி தானமளிப்பு மீதும் விழிப்புணர்வை உருவாக்கும் பணியை இந்த செயல்முயற்சி சிறப்பாக தொடர்ந்து செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”

ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த தலைமுடி தானமளிப்பு செயல்திட்டமானது, 2022 பிப்ரவரி 4ம் தேதியிலிருந்து தொடங்கி மார்ச் 8ம் தேதிவரை இந்தியாவெங்கிலும் 375க்கும் அதிகமான க்ரீன் ட்ரெண்ட்ஸ் சலூன்களில் செயல்படுத்தப்படுகிறது. எந்தவொரு க்ரீன் ட்ரெண்ட்ஸ் சலூன்களுக்கும் முடி தானமளிக்க விரும்பும் நபர்கள் சென்று கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அவர்களது தலைமுடியை இந்த நல்ல நோக்கத்திற்காக தானமளிக்கலாம். இந்த தானமளிப்பிற்கு தலைமுடியானது குறைந்தது 10 அங்குலம் நீளமானதாக இருக்க வேண்டும். தானமளிக்கும் நபர்கள் அவர்கள் விரும்புகிற அளவுக்கு குறைவாக அல்லது மிக அதிகமாக தங்களது தலைமுடியை தானமாக வழங்கலாம். 

தலைமுடியை தானமளிக்க விரும்புபவர்கள் அவர்களுக்கு அருகிலுள்ள க்ரீன் ட்ரெண்ட்ஸ் சலூன் அமைவிடத்தை கண்டறிய mygreentrends.in என்ற வலைதளத்தை காணலாம் அல்லது 18004202020 என்ற எண்ணை அழைக்கலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.me/trichyvisionn