திருச்சி மாநகர காவல்துறை மற்றும் VDart நிறுவனம் இணைந்து நடத்தும் குறும்பட போட்டி!!

திருச்சி மாநகர காவல்துறை மற்றும் VDart நிறுவனம் இணைந்து நடத்தும் குறும்பட போட்டி!!

திருச்சி மாநகர காவல் மற்றும் VDart தனியார் நிறுவனம் ஆகியோர் இணைந்து குறும்பட போட்டி நடத்தவுள்ளனர்.

Advertisement

இதற்காக தலைப்பு: பயணம் மற்றும் சாலை பாதுகாப்பு (Journey and Road Safety).

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு குறும்பட போட்டியானது இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே சாலைவிதிகளை மதித்தல், சாலை பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கத்துடனும், சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது.

Advertisement

அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். தங்களது பதிவுகளை குறிப்பிடப்பட்டுள்ள கூகுள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்போட்டியில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பரிசு வழங்க உள்ளார்கள்.

Advertisement

சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் எடுத்துரைக்கும் மகத்தான பணியில் கலந்து கொள்ள திருச்சி மாநகர காவல் சார்பாக கேட்டுக் கொள்கின்றனர்.

விதிமுறைகள்:

http://bit.ly/TCP-shortflim2021-rules

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM