வீட்டில் நுழைந்த 7 அடி நீளமுள்ள பாம்பு- கண்டுபிடித்த வளர்ப்பு நாய்

வீட்டில் நுழைந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை வளர்ப்பு நாய் கண்டுபிடித்தது – தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பாம்பை பிடித்தனர்
திருச்சி மாவட்டம் மணிகண்டம் யூனியன் ஆபீஸ் அருகேஉள்ள வைகை நகர் பகுதியில் ராஜராஜன் என்பவரது வீட்டில் இன்று காலை 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று நுழைந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் வீட்டின் முன் உள்ள ஒரு பகுதியில் வளர்ப்பு நாய் ‘டைகர்’ தொடர்ந்து ஒதுங்கிக் குறைக்கும் வண்ணம் இருந்ததய் ராஜராஜனின் மனைவி கவனித்து விரைந்து சென்று பார்த்தபோது, அந்த மூலை பகுதியில் பாம்பு பதுங்கியிருப்பது தெரிந்தது. உடனடியாக, அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார்.
தகவலை தொடர்ந்து தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் சத்திய வர்தனன் தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்ட வீரர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து செயல்பட்டனர். பாம்பை பாதுகாப்பாக பிடித்து அருகிலுள்ள காடு பகுதியில் விடுவித்து வந்தனர்.
மேலும், வீட்டு சுற்றுவட்டத்தில் குப்பைகள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை தவிர்க்க வேண்டும். வெயில் நேரங்களில் குளிர்ச்சிக்காக பாம்புகள் இதுபோன்ற இடங்களில் பதுங்க வாய்ப்பு உள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தீயணைப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision