திருச்சி கோணக்கரை பகுதிகளில் சாலையோர குப்பைகளை அகற்றாவிடில் போராட்டம் நடத்தப்படும் -பிஜேபி மாவட்ட செயலாளர் அறிவிப்பு!
திருச்சி கோணக்கரை சாலை பகுதிகளில் குப்பைகளை கொட்டியே குப்பை மேடாக மாற்றி வருகின்றது மாநகராட்சி என்று குற்றம்சாட்டியுள்ளார் பிஜேபி திருச்சி மாவட்ட செயலாளர் கணேஷ்.
இதுகுறித்து அவர் கூறுகையில், திருச்சி மாவட்டம் கோணக்கரை பகுதிகளில் மாநகராட்சியில் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரிப்பதற்காக மயான பகுதிகளுக்கு பின்னால் கொட்டப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் அதிகளவு குப்பைகள் சேகரிக்கப்பட்டு குப்பை மேடாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் இதனை தொடர்ந்து கண்காணித்து வந்து மாநகராட்சி ஆணையரிடம் குப்பைகளை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை வார்த்தைகளை தருகிறார்களே தவிர நடவடிக்கை எடுப்பதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லை இன்னும் ஓர் ஆண்டுகள் போனால் அரியமங்கலம் குப்பை மேடை போல இந்தப் பகுதியும் மாறி விடும் அபாய நிலையில் தான் உள்ளது.
சாலையோரம் இப்படி குப்பை கொட்டுகின்றன இதற்கு எதிர்திசையில் விளை நிலங்களில் விவசாயம் நடைபெற்று கொண்டிருக்கிறது இதனால் அப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை செல்வதால் பல்வேறு இடர்கள் ஏற்படுகின்றன.
அதுமட்டுமின்றி உறையூர் வெக்காளியம்மன் கோவில் திருவிழா காலங்களில் பக்தர்கள் காவிரி கரையில் இருந்து பால்குடம் ஏந்தி செல்லும்போது இந்த சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர் ஸ்ரீரங்க பெருமாள் கோவில் உலாவரும் நேரத்தில் இந்த சாலைகள்தான் பயன்படுத்துகின்றனர், இப்படி எல்லாவற்றிற்கும் பயன்படும் சாலைகளில் குப்பை கூளமாக கிடப்பது பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் விதத்திலும் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாக உள்ளது ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள இருப்பதாக தெரியவில்லை.
இன்னும் 10 நாட்களில் இதற்கான நடவடிக்கை எடுக்காவிடில் பிஜேபி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF