திருச்சி ராம கிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் தனியாளாக உண்ணாவிரத போராட்டம்:

திருச்சி ராம கிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் தனியாளாக உண்ணாவிரத போராட்டம்:

திருச்சி ராம கிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் பன்னீர் செல்வம் தனக்கு ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை என உயர்நீதிமன்ற உத்தரவை பெற்று தனியாளாக உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.

திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது சி.இ. மேல்நிலைப்பள்ளி, இதில் 1992 முதல் 26 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றியவர் பன்னீர்செல்வம்.
கடந்து 2015 ஆம் ஆண்டில் பள்ளியின் தாளாளராக ஜேம்ஸ் என்பவர் பொறுப்பேற்றவுடன் பன்னீர் செல்வம் உட்பட 4 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.தொடர்ந்து இரண்டு ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்ட நிலையில் இவரை பணியில் சேர்க்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஜேடி ஆய்வு செய்து இவருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

ஆனால் இன்றுவரை  பணி வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2018 உடன் இவருடைய பணிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெற்றதையடுத்து, நிலுவையிலுள்ள சம்பளத்தை மற்றும் ஓய்வூதியத்தை பெறுவதற்காக பல முறை முயற்சித்தும் எந்த ஒரு பலனும் இல்லை என்பதால் இத்தகைய அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளதாக ஜேம்ஸ் தெரிவிக்கிறார். மேலும் இது சிறுபான்மை பள்ளி என்பதாலும் அங்கீகாரம் பெறாத பள்ளி என்பதாலும் தனக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க மறுப்பதாக தெரிவிக்கின்றார்.தான் அரசு ஊழியர் என்று இருந்தும் இத்தகைய காரணங்களை காட்டி ஓய்வூதியத்தை மறுப்பது என்பது ஏற்புடையது அல்ல என்றும்,

எனவே திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக இதில் தலையிட்டு தனக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.