குடியரசு தினவிழா அணிவகுப்புக்கு திருச்சி தேசிய கல்லூரி மாணவி தேர்வு:

குடியரசு தினவிழா அணிவகுப்புக்கு திருச்சி தேசிய கல்லூரி மாணவி தேர்வு:

திருச்சி தேசிய கல்லூரி விளையாட்டுத்துறையில் மகத்தான சாதனை புரிந்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் இந்திய அளவிலும் பல்வேறு பரிசுகளை குவித்து வந்துள்ளது. இந்நிலையில் வருகின்ற குடியரசு தினவிழாவில் புது டெல்லியில் நடைபெற இருக்கும் அணிவகுப்பிற்காக திருச்சி தேசிய கல்லூரி மாணவி கலந்து கொள்வதற்காக தேர்வு பெற்றுள்ளார்.

மாணவி வேணி‌

உடற்கல்வியியல் துறை மூன்றாமாண்டு மாணவி வேணி‌. இவர்தான் வருகின்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவி. அணிவகுப்பில் கலந்து கொள்ளும் இம்மாணவி நமது திருச்சிக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement