திருவெறும்பூரைச் சேர்ந்த இளம் பெண் டிஎஸ்பியாக தேர்வு

திருவெறும்பூரைச் சேர்ந்த இளம் பெண் டிஎஸ்பியாக தேர்வு.திருவெறும்பூர் மே 10 திருவெறும்பூர் அருகே உள்ள கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற டி எஸ் பி மகள் டிஎன்பிஎஸ்சி குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆக தேர்வு பெற்று உள்ளார்
திருவெறும்பூர் துவாக்குடி காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராகவும் கீரனூர் புதுக்கோட்டை பகுதியில் டிஎஸ்பி ஆகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆறுமுகம். இவரது மனைவி பத்மா துவாக்குடி மலை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் ஏ.பி. அபிநயா டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில் டிஎஸ்பி பதவிக்கு தேர்வாகியுள்ளதால்
அதற்கான ஆணையை டிஎன்பிஎஸ்சி சேர்மன் பிரபாகரன் ஐஏஎஸ் வழங்கினார். இதனை அடுத்து டிஎஸ்பியாக தேர்வாகியுள்ள அபிநயாவை திருவெறும்பூர் பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினர் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision