தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுடன் ஆய்வு- திருச்சி எம்.பி

தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுடன் ஆய்வு- திருச்சி எம்.பி

இன்று (10.05.2025) காலையிலிருந்து, எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டேன்.

காலை 7 மணிக்குத் தொடங்கிய ஆய்வுப் பயணத்தில், முதலாவதாக பொன்னுரங்கபுரம், திருவானைக்கோவில், திருச்சி மாநகராட்சியின் 6-ஆவது வார்டு ஆகிய பகுதிகளில் உள்ள பழுதடைந்த பாலத்தைப் பார்வையிட்டேன். அப்போது, பாலத்தைப் பழுதுபார்க்க வேண்டும் மற்றும் பொதுக் கழிப்பிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் என்னைச் சந்தித்தனர்.

அடுத்ததாக, கொள்ளிடம் Y-கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அதிகாரிகளுடன் இணைந்து களஆய்வு மேற்கொண்டேன். ஏற்கனவே கோரிக்கை மனு பெறப்பட்டு, அதற்குண்டான பணிகளும் தொடங்கிட ஒப்புதல் பெற்ற நிலையில், இன்றைய கள ஆய்வில் வரைபடங்களுடன் திட்டப் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தேன். புதிய சாலை தொடங்குமிடம், சர்வீஸ் சாலையின் அமைப்பு, சுரங்கப்பாதையின் அகலம், உயரம் குறித்த தகவல்களை கேட்டறிந்தேன். 

இந்த சுரங்கப்பாதை அமைவதற்கு முன் அப்பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நேரிட்ட சிரமங்கள், சுரங்கப்பாதை அமையப் பெரும்போது ஏற்படப்போகும் பயன்கள் குறித்து கேட்டறிந்தேன். அப்பகுதி பொதுமக்களும் உடனிருந்தனர்.

பின்னர், சஞ்சீவி நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் குறித்து அப்பகுதி மக்களுடன் உரையாடினேன். உடனடியாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியபோது, அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வாய்ப்பிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கான பணிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தேன்.

மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவதே அரசியல்வாதிகளின் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் முதன்மைக் கடமையென நான் கருதுகிறேன். இன்றைய ஆய்வுப் பயணம் அத்தகைய நற்செயலாக அமைந்தது.

இந்நிகழ்வில், துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் திருச்சி மாநகர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி புறநகர் வடக்கு டி.டி.சி. சேரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் துரை வடிவேல், அப்பீஸ் முத்துக்குமார், தலைவர் வைகோ

 அவர்களின் உதவியாளர் வெ. அடைக்கலம், பகுதிச் செயலாளர்கள் உறையூர் (ஆசிரியர்) முருகன், மார்க்கெட் கே.பி. மனோகரன், திருவெறும்பூர் சோமு, புத்தூர் கோபாலகிருஷ்ணன், கந்தப்பன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ராமன், இளைஞர் அணி விக்கி ஆகியோர் உடனிருந்தனர். என்று துரை வைப்பவர்கள் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision