உத்தமர்கோவில் சித்திரை தேரோட்டம்- பக்தர்கள்கோவிந்தா... கோவிந்தா...என பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்

உத்தமர்கோவில் சித்திரை தேரோட்டம்- பக்தர்கள்கோவிந்தா... கோவிந்தா...என பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள உத்தமர்கோவில் சித்திரை தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள மும்மூர்த்திகள் ஸ்தலமான அருள்மிகு உத்தமர்கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு அனுதினமும் புருஷோத்தம பெருமாள் சூரிய பிரபை வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடு கண்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.இதையொட்டி காலை 8.30 மணிக்கு புருஷேத்தம பெருமாள் உபய நாச்சியார்களுடன் புறப்பாடு கண்டு திருத்தேர் தட்டில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனைத்தொடர்ந்து 11 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றதை அடுத்து கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேரில் எழுந்தருளிய புருஷோத்தம பெருமாள் உபய நாச்சியார்களுடன் கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision