மூக்குத்திக்காக மூதாட்டியை கொன்ற குற்றவாளி ஒரு மணி நேரத்தில் கைது

மூக்குத்திக்காக மூதாட்டியை கொன்ற குற்றவாளி ஒரு மணி நேரத்தில் கைது

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போசம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ராஜம்மாள் என்பவர் அதே ஊரில் வசித்து வரும் அவரது தம்பி பன்னீர்செல்வம் என்பவரது வீட்டிற்குச் சென்று வீட்டு வேலைகள் கவனித்து வந்த நிலையில்

கடந்த (8.05.2025 )ஆம் தேதி அன்று 10 மணியளவில் அவரது தம்பி வீட்டின் பின்புறம் உள்ள வயல்க்காட்டில் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதில் ராஜம்மாள் தலை நடுப்பகுதியில் வெட்டு காயத்துடன் மூக்கு அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதன் பேரில் அதே ஊரை சேர்ந்த குணா என்பவர் வயல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்ததாக இறந்து போனவரின் தம்பி பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில் குணா என்பவரிடம் சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொண்டதில் குற்றத்தை ஒப்புக்கொண்டு இறந்து போன ராஜம்மாவை  அவர் கையில் வைத்திருந்த பில் அறுக்கும்  அருவாளின் பிடிப்பகுதியைக் கொண்டு தலையில் தாக்கியதாகவும் மேலும் அவர் அணிந்திருந்த மூக்குத்தியை அறுத்து எடுத்து சென்றதாக ஒப்புக்கொண்டார்.

 இது சம்பந்தமாக பன்னீர்செல்வம் என்பவர் கொடுத்த  புகார் அடிப்படையில் சோமரசம்பேட்டை  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குற்ற சம்பவம் தொடர்பாக கண்காணிப்பாளர் திரு செல்வ நாகரத்தினம் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு காவல் அதிகாரிகள்ளுக்கு அறிவுரைகள் வழங்கியதின் பெயரில் குற்றவாளியை குற்றம் நடைபெற்ற ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பின் குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision