திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 5075 பயனாளிகளுக்கு 31 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள்

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 5075 பயனாளிகளுக்கு 31 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் சமத்துவ நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 49,542 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை திருச்சி கலையரங்கில் காணொளி காட்சி வாயிலாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்வினை தொடர்ந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டு, திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 5075 பயனாளிகளுக்கு 31 கோடியே 18 லட்சம்
மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் இளம்பரிதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision