கஞ்சா குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை- எஸ் பி செல்வ நாகரத்தினம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை திருச்சி எஸ் பி செல்வ நாகரத்தினம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பெல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 10ம் தேதி திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பெனாவாத் தனிப்படையினர் பெல் கைலாசபுரம் டவுன்சீப் குடியிருப்பு பகுதியில்
குடியிருந்து வரும்ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஸ்ரீதரன் மகன் நரேஷ் ராஜு (26) தடை செய்யப்பட்ட கஞ்சா 2.600 கி.கி வைத்திருந்ததாக கைது செய்தனர்.அவனிடம் இருந்து 2.600 கி.கி கஞ்சா மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக பெல் போலீசார் வழக்கு பதிவு செய்துநரேஷ் ராஜுவை சிறையில் அடைத்தனர்.
அதேபோல் 13ம் தேதி காலை துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய தொழில்நுட்ப கல்லூரி அருகே துவாக்குடி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ், இரண்டு காவலர்களுடன் வாகன தணிக்கையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்தப்போது 4 கிலோ கஞ்சா தூள் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த்தாக ஒப்புக்கொண்டதோடு
திருச்சி இரட்டை வாய்க்கால் வாசன் நகரை சேர்ந்த நல்லுசாமி மகன் சதீஷ்குமார் (29)திருச்சி தென்னூரை சேர்ந்த சிராஜுதீன் மகன் முகமது இசாக் (28)ஆகிய இருவரையும் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்களை பெரும் முதல் செய்தனர் சிறப்பாக பணி செய்த அதிகாரி மற்றும் ஆளினர்களை ஊக்குவிக்கும் வகையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம் நேற்று மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பண வெகுமதி வழங்கினார்.
மேலும், இது போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை. போலி மதுபான விற்பனை, கள் விற்பனை. போதை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும் பிற போதை வஸ்துக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால் பொதுமக்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100 (வாட்ஸ்அப்) மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0431-2333621 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல்
தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரியான தகவல் கொடுப்போருக்கு மாவட்ட காவல் அலுவலகம் வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பாராட்டி "பாராட்டு சான்றிதழ்" வழங்கப்படும் எனவும். தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision