அனுமதியின்றி குளத்தை ஏலம் விட கூடிய மக்கள்- தடுத்து நிறுத்திய காவல்துறை!

அனுமதியின்றி குளத்தை ஏலம் விட கூடிய மக்கள்- தடுத்து நிறுத்திய காவல்துறை!

திருச்சி மாவட்டம் பத்தாளபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மாங்காவனம் கிராமத்தில் அனுமதியின்றி அங்கன்வாடி மையத்தில் பொதுமக்கள் கூடி குளம் ஏலம் விட்டதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Advertisement

முக கவசம் அணியாமலும்,சமூக இடைவெளி இல்லாமலும் மக்கள் கூடியுள்ளனர். 150 ஏக்கர்
குளத்தை மீன்பிடிக்காக கிராமத்தில் வருடாவருடம் ஏலம் விட்டு வந்த நிலையில், எப்பொழுதும் ஒரே தரப்பினர் மட்டுமே ஏலம் எடுப்பதாகவும், குளம் ஏலம் விடுவதில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை உள்ள நிலையில் தற்போது குளம் ஏலம் விட கூடாது என அப்பகுதி மக்கள் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து குளம் ஏலம் விடுவது பாதியிலேயே
 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.