அதிகரிக்கும் கொரோனா! திருச்சி கடைவீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு!!

அதிகரிக்கும் கொரோனா! திருச்சி கடைவீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு!!

திருச்சியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடைவீதி பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து இப்பகுதிகளில் மக்கள் அதிகம் கூடி வருவதால் இப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியுள்ளது.

திருச்சி மாநகராட்சி NSB சாலை, பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, கம்மாள தெரு, சின்ன செட்டி தெரு உள்ளிட்ட இடங்களில் தங்க, வைர கடைகளிலும், ஜவுளி நிறுவனங்களிலும் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறி அறியப்பட்டது.

Advertisement

NSB ரோடு, பெரியகடைவீதி ஆகியவை கொரோனாவின் கூடாரமா? நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்? என்கிற தலைப்பில் கட்டுரைகளை வெளியிட்டோம். இந்நிலையில் பெரிய கடைவீதி, கமான் வளைவுமுதல் கள்ளத்தெரு வரை, மேலரண்சாலையின் கிழக்கு ஜாபர்ஷா தெரு முதல் பாஸ்போர்ட் ஆபீஸ் வரை, வார்டு 16,17,18 பகுதிகளல் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.மேலும் அப்பகுதியில் தொற்று அறிகுறி தொடர்ந்து அதிகரித்து இருப்பதால் 10ம் தேதி இன்று இரவு முதல் 24ம் தேதி இரவு 12 மணி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் அறிவித்தார்

இப்பகுதிகளில் குடியிருப்போருக்குத் தேவையான அத்தியாவாசப்பொருட்களான சிறுமளிகை, மெடிக்கல், பால், காய்கறி கடை தவிர பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இன்று இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அமலாகிறது.