சிறந்த கல்லூரி முதல்வர் விருதுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் Dr.பால் தயாபரன் தேர்வு.

Aug 16, 2021 - 19:25
 370
சிறந்த கல்லூரி முதல்வர் விருதுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் Dr.பால் தயாபரன் தேர்வு.

All India Association for Christian Higher  நிறுவனம் ஒரு Eucumenical - அதாவது இந்தியாவில் உள்ள சபை பாகுபாடின்றி அனைத்து கிறிஸ்தவ உயர்கல்வி நிலையங்களை உள்ளடக்கிய ஒரு நிறுவனமாகும். இச்சங்கத்தில் நாடு முழுவதும் உள்ள சுமார் 350 கிறிஸ்தவ உயர்கல்வி நிலையங்கள் அங்கம் வகித்து உள்ளார்கள்.

இந்த ஆண்டு AIACHE-இன் சிறந்த கல்லூரி முதல்வருக்கான விருது திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் Dr. பால் தயாபரனுக்கு வழங்கி கௌரவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பினை AIACHE இன் பொதுச் செயலாளர் அருள்திரு. டாக்டர். சேவியர் வேதம் SJ வெளியிட்டுள்ளார்.

மதிப்புமிகு AIACHE இன் சிறந்த கல்லூரி முதல்வருக்கான விருது பெற்றுள்ள திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் Dr. பால் தயாபரனுக்கு கல்லூரி ஆட்சி மன்ற தலைவர் & செயலாளர்  திருச்சி தஞ்சை பேராயர் ரெவரண்ட் டாக்டர் பேராயர். சந்திரசேகரன் மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn