ஆறாம் சுற்று கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்
தமிழகமெங்கும் கொரோனா நோயை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும்
மாநிலத்தி்ன் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 13,87,666
நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது .
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மீண்டும் 23.10.2021 அன்று தமிழகமெங்கும் ஆறாம் சுற்று சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இதனையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும்
மீண்டும் 23.10.2021 அன்று 600 க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனோ சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் இருவகையான தடுப்பூசிகளையும் முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் அருகில் உள்ள முகாமிற்கு சென்று தங்களுக்கு
உரிய தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு கொரோனோ நோயிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டு கொள்கிறார்.
ரஷ்யா மற்றும் இங்கிலாந்து
போன்ற மேலை நாடுகளிலும் மீண்டும் கோரோனோ பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையினை
தவிர்க்க நாம் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் என்ற மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி பொது மக்கள் அனைவரும் இரண்டு தவணைகள் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு கொரோனா நோயிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn