பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆதார் சிறப்பு முகாம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆதார் சிறப்பு முகாம்

இந்திய அஞ்சல் துறை மற்றும் திருச்சி நகர சரக தொடக்க கல்வித்துறை இணைந்து, தென்னுர், சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் (28, 29, 30.09.2021) (செவ்வாய், புதன், வியாழன் ) ஆகிய 3  நாட்களில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நேரம் : காலை 10.00 முதல் மாலை 5.00 வரை  

இதில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் புதியதாகவும், திருத்தமும் செய்யப்படுகிறது. ஆசிரியர்களுக்கு ஆதாரில் தொலைபேசி எண் மாற்றி தரப்படுகிறது.  

பள்ளி மாணவர்கள் ஆதார் எண் EMIS ல் update செய்ய ஏதுவாக ஆதார் இல்லாத மாணவர்களை கண்டறிந்து முகாம் நடைபெறும் பள்ளி தலைமையாசிரிடம் எப்போது வர வேண்டும் என கேட்டு 100 சதவிகிதம் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் பெற்றிட அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

(புதிய ஆதார் எடுக்க தேவையானவை) 

1. மாணவர் பிறப்பு சான்றிதழ் அசல்,

2. தாய் அல்லது தந்தை அசல் ஆதார் அட்டை

3. பிறப்பு சான்றிதழ் பெயரில் திருத்தம் இருந்தால் மட்டும் bonafide certificate வேண்டும்.

4. தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவர் நேரில் மாணவரை கூட்டி வர வேண்டும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn